புதிய சவால்களை எதிர்கொண்டு, வலிமையான எதிரிகளுடன் போராடி, திருப்பம் அடிப்படையிலான போர்களை வழிநடத்தி, உங்கள் அதிபர் அந்தஸ்தைப் பாதுகாக்கும் பிரபலமான போர் உத்தி சாகசத்தை விளையாடுங்கள். நாடுகளை ஆக்கிரமித்து வெல்லுங்கள், பரபரப்பான பொருளாதாரத்தை வளர்த்தெடுங்கள், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் இராணுவ சக்தியில் முதல் இடங்களுக்குப் போட்டியிடுங்கள்
நவீன யுகம் 2 - உண்மையான அதிபராக மாறுவதற்கும், உண்மையான அரசியலை வழிநடத்துவதற்கும், உங்கள் நாகரிகத்தை நிர்வகிப்பதற்கும் அதிபர் சிமுலேட்டர் சிறந்த வழியாகும். உங்கள் தந்திரங்களைத் திட்டமிட்டு, மக்கள்தொகை, இராஜதந்திரம், நிதிகளை நிர்வகிப்பதற்கான சிறந்த ஒற்றை பிளேயர் கேமில் புதிய தொழில்நுட்பங்களைக் கண்டுபிடியுங்கள்
மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துங்கள்
கலவரங்கள், எதிர்ப்புகள் மற்றும் புரட்சிகளைத் தவிர்க்க அதிபரின் மதிப்பீட்டைக் கண்காணியுங்கள். தொழிற்சாலைகள், சுரங்கங்கள், பண்ணைகள், பேக்கரிகள், தோட்டங்கள், எண்ணெய் தோண்டும் கருவிகள், பசுமை இல்லங்கள், மின் உற்பத்தி நிலையங்கள், கிரீன் எனர்ஜி ஆகியவற்றை உருவாக்குங்கள். கலாச்சார அமைச்சகத்திற்கு நிதியளித்து; இசை நிகழ்ச்சிகள், திரைப்பட விழாக்கள், திருவிழாக்கள், டேவிஸ் கப், FIFA உலகக் கோப்பை, ஒலிம்பிக் கேம்களை நடத்துங்கள்
அமைச்சகங்களை நிர்வகியுங்கள்
குடிமக்களின் வாழ்க்கையை மேம்படுத்த உதவும் சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு, கலாச்சாரம், விளையாட்டு, நீதி, காவல்துறை, பாதுகாப்பு அமைச்சகம், பாதுகாப்புச் சேவை, தேசிய காவல்படை மற்றும் பிற அமைச்சகங்களுக்கு நிதியளித்து வளர்த்தெடுங்கள். உங்கள் நாட்டை உலக சுற்றுலா மையமாக மாற்றி மில்லியன்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க, சுற்றுலா அமைச்சகத்தை வளர்த்தெடுங்கள். உலக அதிசயங்களை உருவாக்குங்கள்: ஈபிள் கோபுரம், கொலோசியம், பிக் பென், சுதந்திர தேவியின் சிலை
நிதிகளைக் கட்டுப்படுத்துங்கள்
வரிகளை நிர்வகித்து, வட்டிக்குக் கடன் கொடுத்து, பொருட்கள் மற்றும் வளங்களை வர்த்தகம் செய்து, உதவி கேட்டு, கடன் வாங்கி, புதிய பொருளாதார தொழில்நுட்பங்களை ஆராயுங்கள்.
போர்முறை
இராணுவத்தையும் கடற்படையையும் உருவாக்கி, வீரர்களைப் பயிற்றுவித்து, போர்களில் அனுபவம் பெற்று, நாசவேலையாளர்கள் மற்றும் உளவாளிகளை அனுப்பி, புதிய போர் தொழில்நுட்பங்களை ஆராயுங்கள். படைவீரர் முகாம்கள், ஆயுதக் கிடங்குகள், வான்படைத் தளங்கள், விமானத் தளங்கள், கப்பல் கட்டும் தளங்கள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளைக் கட்டுங்கள். அணு ஆயுதங்களை ஆராய்ந்து உருவாக்கி, எதிரியின் மீது அணுத் தாக்குதலை நடத்துங்கள்!
சர்வதேச அரசியல்
மற்ற நாடுகளிடையே நண்பர்களைப் பெற்று, சர்வதேச அமைப்புகளில் சேர்ந்து, ஆக்கிரமிப்பு இல்லாத உடன்படிக்கைகள், பாதுகாப்புக் கூட்டணிகள், வர்த்தகம் மற்றும் ஆராய்ச்சி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு, தூதரகங்களைத் திறந்திடுங்கள். ஐ.நா. மற்றும் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் வாக்களித்து, தடைகளை விதித்து, வாக்கெடுப்பிற்கான தீர்மானங்களை முன்மொழியுங்கள்
சவால்களை எதிர்கொள்ளுங்கள்
கடற்கொள்ளையர் மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு எதிராகப் பாதுகாத்து, பேரழிவுகள், தொற்றுநோய்கள், பெருந்தொற்று, எதிர்ப்புகள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொருளாதார மந்தநிலைகளை எதிர்கொள்ளுங்கள். நிஜ அதிபரும் தலைவரும், கடினமான காலங்களில் தங்கள் குடிமக்களுக்கு உதவ எப்போதும் தயாராக இருக்கிறார்
அரசாங்க நிர்வாகம் மற்றும் யதார்த்தமான உத்திசார்ந்த கேமை விளையாடி மகிழுங்கள், நவீன யுகம் 2 - அதிபர் சிமுலேட்டர் உங்களுக்கானது! உத்திசார்ந்த முடிவுகளை எடுத்து வரலாற்றின் போக்கை மாற்றுங்கள்!
உங்கள் அரசை உலகில் மிகவும் பிரபலமானதாகவும் வலிமையானதாகவும் மாற்றி, சிறந்த அதிபராக மாறுங்கள்!
*பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக மட்டுமே கேம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நிஜ உலகம், நிஜ மனிதர்கள் மற்றும் புவிசார் அரசியல் சூழ்நிலைகளுடனான எந்தவொரு ஒற்றுமையும் தற்செயலானது*
கேமை iOS, iPhone, iPad, PC ஆகிய தளங்களிலும் பெறலாம்
இந்த கேம் பின்வரும் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது: ஆங்கிலம், ஸ்பானிஷ், உக்ரேனியன், போர்த்துகீஸ், பிரெஞ்ச், சீனம், ரஷ்யன், துருக்கிஷ், போலிஷ், ஜெர்மன், அரபிக், இத்தாலியன், ஜப்பானீஸ், இந்தோனேஷியன், கொரியன், வியட்நாமீஸ், தாய்.
புதுப்பிக்கப்பட்டது:
25 செப்., 2025
ஒருவர் மட்டும் விளையாடும் கேம்கள்